கோலாலம்பூர், மே.02
உலக ஊடகவியலாளர் குறியீட்டு தர வரிசையில் மலேசியா 88 ஆவது இடத்தில் இடம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியா 19 இடங்களிலிருந்து முன்னேறி, 88 ஆவது இடத்தைப் பெற்று இருப்பது புதிய சாதனையாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிற்கு இவ்வாண்டில் 56.09 விழுக்காடு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.