விபத்தில் மூவர் உயிரிழந்தனர் -பலாக்கோங்கில் சம்பவம்

பலாக்கோங், மே.02-

கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் பலாக்கோங் அருகில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பை மோதி , விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, மூவரும் உயிரிழந்ததாக தீயணைப்பு, மீட்புப்படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்விபத்து குறித்து காலை 6.07 மணிக்கு தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு, உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படை வீர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடியாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS