கோலாலம்பூர், மே.02-
நெகிரி செம்பிலான், ஜெம்போல் தொகுதி, பிகேஆர் தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் மணிவண்ணன் கோவின் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முகமட் அஸ்ரி அப்துல்லாவிடம் வெற்றிக் கொண்ட மணிவண்ணனுக்கு 571 வாக்குகள் கிடைத்தன. முகமட் அஸ்ரிக்கு 229 வாக்குகள் கிடைத்தன. மும்முனைப் போட்டியில் மற்றொரு வேட்பாளரான மாரியப்பன் கட்டையனுக்கு 39 வாக்குகள் கிடைத்தன.
ஜெம்போல் தொகுதி தேர்தல் இதற்கு முன்பு நடைபெற்ற போது, அஸிஸா சாலீம், வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர், இன்னொரு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் என்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மறு தேர்தல் நடத்தப்பட்டது.