மலாக்கா, மே.02-
மலாக்கா, பெர்னு, புக்கிட் கெசிலில் இரண்டு தலைகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி இறந்தது. அந்த ஆட்டுக்குட்டியைக் காப்பாற்வதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நேற்று பிற்பகல் 2 மணியளவில் அது மடிந்தது.
அந்த ஆட்டுக்குட்டிக்கு முறையாகப் பால் கொடுக்கப்பட்டும், மிக பலவீனமாகக் காணப்பட்டது என்று அதன் உரிமையாளரான 57 வயது அபு ஷா ஹாஷிம் தெரிவித்தார்.
அந்த ஆட்டுக்குட்டி பிழைப்பது கடினம் என்றும், மிக பலவீனமாகக் காணப்படுகிறது என்றும் கால் நடை மருத்துவர்கள் தெரிவித்ததாக அபு ஷா குறிப்பிட்டார்.