மாசாய், மே.02-
ஜோகூர், மாசாய், பண்டார் ஶ்ரீ ஆலாமில் கடந்த புதன்கிழமை பெண் ஒருவரிடம் வழிப்பறிக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு ஆடவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள், பெண்ணின் கைப்பையைப் பறிக்க முயற்சி செய்த காட்சியைக் கொண்ட ஒரு நிமிட காணொளி, சமூக வலைத்தளத்தில் வைரலானது.
அதனை அடிப்படையாகக் கொண்டு அந்த இரு கொள்ளையர்களும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சொஹய்மி இஷாக் தெரிவித்தார்.
23 மற்றும் 35 வயதுடைய அந்த இரு ஆடவர்களும் நேற்று வியாழக்கிழமை மாலை 6.20 மணியளவில் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.