இஸ்கண்டார் புத்ரி, மே.02-
கார் நிறுத்தும் இடத்தைக் கைப்பற்றுவதில் இரண்டு ஆடவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்ச் சண்டை, கைகலப்பில் முடிந்தது. இரண்டு ஆடவர்கள் ஒருவரையொருவர் குத்திக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இச்சம்பவம் ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, தாமான் இண்டாவில் நேற்று நிகழ்ந்தது. 21 வயது ஆடவருக்கும், ஒரு சிங்கப்பூர் பிரஜையான 49 வயதுடைய நபருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் புலன் விசாரணை செய்து வரும் வேளையில் இது குறித்து ஆருடம் கூற வேண்டாம் என்று பொது மக்களுக்கு குமரேசன் வலியுறுத்தியுள்ளார்.