மூன்று மாதத்திற்குச் சம்மன் வழங்கப்படாது

கோலாலம்பூர், மே.02-

தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் மருந்துப் பொருட்களின் விலை, கட்டாயம் காட்சிக்கு வைக்க வேண்டும் என்ற நிபந்தனை, நேற்று மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் மருந்துப் பொருட்களின் விலைப் பட்டியலைக் காட்சிக்கு வைக்கத் தவறும் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு முதல் மூன்று மாத காலத்திற்கு சம்மன் வழங்கப்படாது என்று சுகாதார அமைச்சின் துணை தலைமை இயக்குநர் டாக்டர் அஸுவானா ரம்லி தெரிவித்தார்.

இந்த மூன்று மாத காலத்தில் மருந்துப் பொருட்களின் விலைப் பட்டியலைக் காட்சிக்கு வைக்க வேண்டிய அவசியம் குறித்து கிளினிக்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வரும் என டாக்டர் அஸுவானா ரம்லி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS