ரபிஸி ரம்லி விடுமுறை எடுக்கக்கூடாதா?

கோல லங்காட், மே.02-

பொருளாதார அமைச்சரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான ரபிஸி ரம்லி, தற்போது விடுமுறையில் இருந்து வருவது குறித்து கேள்வி கேட்கும் தரப்பினரைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சாடினார்.

ரபிஸி ரம்லி, விடுமுறை எடுக்கக்கூடாதா? என்று டத்தோஸ்ரீ அன்வார் கேள்வி எழுப்பினார். கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரபிஸி ரம்லி கலந்து கொள்ளாதது மற்றும் அமைச்சில் காணப்படாதது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி கேட்டு வருவது தொடர்பில் மெளனம் சாதித்து வந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், அதற்கான பதிலைத் தந்தார்.

இன்று கோல லங்காட், சௌஜானா புத்ராவில் உள்ள பள்ளி வாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிகேஆர் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS