கோலாலம்பூர், மே.02-
புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மூன்று குழந்தைகளுக்குத் தாயாரான மாது ஒருவர் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
42 வயதுடைய பமேலா லிங் என்ற அந்த மாது ஒரு விசாரணைக்காகக் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் இன்று வரை வீடு திரும்பவில்லை என்று அவரின் சகோதரர் சைமன் தெரிவித்தார்.
தனது சகோதரி கடத்தப்பட்டு இருக்கக்கூடும் என்று தாங்கள் சந்தேகிப்பதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.