கோத்தா பாரு, மே.02-
தந்தை ஒருவர், மகனைக் காய்கறிகள் வெட்டும் கத்தியால் குத்தியதில் அந்த 11 வயது சிறுவன் கடும் காயங்களுக்கு ஆளானான்.
இச்சம்பவம் இன்று காலையில் கிளந்தான், பாசீர் மாஸில் நிகழ்ந்தது. நெஞ்சிலும், வயிற்றிலும் ஆழமானக் கத்திக் குத்துக்கு ஆளான அந்த சிறுவன், கோத்தா பாரு, ராஜா பெரும்புவான் ஸைனாப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
காலை 9 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் தகவலைப் பெற்ற போலீசார் அச்சிறுவனின் தந்தையைக் கைது செய்துள்ளதாக பாசீர் மாஸ் போலீஸ் தலைவர் காமா அஸூரால் முகமட் தெரிவித்தார்.