ஈப்போ, மே.02-
கடந்த மாதம் ஈப்போவிலும், கம்பாரிலும் நிகழ்ந்த பெட்ரோல் வெடிகுண்டு வீச்சுத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என்று நம்பப்படும் இரண்டு ஆடவர்கள் இன்று ஈப்போவில் இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
37 வயது கோக் வான் லியாங் என்பவர் தனக்கு எதிராகக் குற்றத்தை ஒப்புக் கொண்ட வேளையில் 25 வயது லின் ஜியா ஹே என்ற நபர், குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தன் கீழ் இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.