பெட்டாலிங் ஜெயா, மே.02-
பாசைப் பூச்சிகள் மற்றும் எலிகளின் எச்சம் நிறைந்த உறைவிடமாகச் சமையல் அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலு சிலாங்கூர் வட்டாரத்தில் மூன்று உணவகங்கள் மூடப்பட்டன.
ஓப்ஸ் சூச்சி மற்றும் ஓப்ஸ் தார்கெட் என்ற இரு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளை உலு சிலாங்கூர் நகராண்மைக்கழம் தொடங்கிய போது பல உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதில் அசுத்தத்தின் உறைவிடமாகக் காணப்பட்ட மூன்று உணவகங்கள் அடுத்த 14 நாட்களுக்கு மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த நகராண்மைக்கழம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.