அலோர் ஸ்டார், மே.02-
தம்முமைடய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, டிக் டோக் பிரபலத்திற்கு எதிராக உள்துறை அமைச்சரும், பக்காத்தான் ஹராப்பானின் பொதுச் செயலாளருமான டத்தோ செஇ சைபுஃடின் நசுதியோன் இஸ்மாயில் அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
அதிகாரத்தைத் தாம் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ள டிக் டோக் பிரபலம் 43 வயது ஸுபாயிர் இஸ்மாயிலுக்கு எதிராக சைபுஃடின் இந்த மான நஷ்ட இழப்பீட்டு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டில் கெடா மாநில கால்பந்து சங்கத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும், வருமான வரி வாரியமும் திடீர் சோதனை மேற்கொண்டதற்குத் தாம் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக ஸுபாயிர் இஸ்மாயில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியதாக சைபுஃடின் தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.