மலாக்கா, மே.02-
சிகை அலங்கரிப்புப் பணியாளர் ஒருவரிடம் சிகை அலங்கரிப்புப் பற்றி விசாரிப்பதைப் போல் திடீரென்று பாலியல் பலாத்காரம் புரிந்ததாக வயது குறைந்த இளைஞருக்கு எதிராக அந்தப் பெண் பணியாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.
இச்சம்பவம் கடந்த புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மலாக்காவில் உள்ள ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தில் நடந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டொப்பர் பாதிட் தெரிவித்தார்.
கூந்தல் ஒப்பனைக்குத் தனது காதலியை அழைத்து வர வேண்டும் என்று கூறி, ஒப்பனை பற்றிய விவரங்களை அறிவதாகக் கூறி, அந்தப் பெண்ணை கீழே தள்ளி, அந்த இளைஞர் பாலியல் சேட்டைப் புரிந்துள்ளார்.
எனினும் அந்த காமுகனிடமிருந்து தப்பிப்பதற்கு அவனை பலம் கொண்டு கடித்ததால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த இளைஞர் சிகை அலங்கரிப்பு நிலையத்தை விட்டு வெளியேறி விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று கிரிஸ்டொப்பர் பாதிட் தெரிவித்தார்.