மருத்துவர்கள் ஆட்சேப மறியலில் ஈடுபட முடிவு

புத்ராஜெயா, மே.02-

தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளைச் சார்ந்த மருத்துவர்கள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை, புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சின் முன் ஆட்சேப மறியிலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

மலேசிய மருத்துவச் சங்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் இந்த ஆட்சேப மறியல் தொடர்பில் அந்த சங்கத்திடமிருந்து நோட்டீஸ் ஒன்றை தாங்கள் பெற்றுள்ளதாக புத்ரா ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஐய்டி சஷாம் முகமட் தெரிவித்தார்.

தனியார் கிளினிக்குகளும், மருத்துவமனைகளும் மருந்துப் பொருட்களின் விலையைக் கட்டாயமாக காட்சிக்கு வைக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை, நேற்று மே முதல் தேதி அமலுக்கு வந்ததை ஆட்சேபிக்கும் வகையில் மருத்துவர்கள் மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS