கோலாலம்பூர், மே.02-
பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தேதி மே 8. 9 ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிகேஆர் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வேட்புமனுத் தாக்கல் ஒத்திவைக்கப்பட்டதற்கானக் காரணத்தைத் தெரிவிக்கவில்லை.
வேட்புமனுத் தாக்கல், நாளை மே 3 ஆம் தேதி, 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் நடத்துவதற்கு அக்கட்சி ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது அந்த தேதிகளில் மாற்றம் செய்துள்ளது.