கோலாலம்பூர், மே.o5-
கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு பிறகு சிங்கப்பூர் பொதுத் தேர்தல் நாளை மே 3 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.
ஆளும் மக்கள் செயல் கட்சியான PAP, ஆட்சியைத் தற்காத்துக் கொள்வதற்கு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு கொண்டு, ஆட்சியைத் தற்காத்துக் கொள்வதற்கான அவசியத்தை வலியுறுத்தி வந்தது.
வேட்பாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பம்பரமாகச் சுழன்று வாக்கு வேட்டையாடி வந்த நிலையில், நேற்று வியாழக்கிழமையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இன்று ஒரு நாள் ஓய்வுக்குப் பின்னர் நாளை வாக்களிப்பு நடைபெறுகிறது.