புத்ராஜெயா, மே.03-
புலன் விசாரணைக்கு உதவும் பொருட்டு, புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குச் செல்வதாக கூறி, புறப்பட்டுச் சென்ற பெண் ஒருவர் , மர்மமான முறையில் காணாமல் போனது தொடர்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி முகமட் ஈசா உறுதிப்படுத்தினார்.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் அந்தப் பெண்மணி காணப்படவில்லை என்று அந்தப் பெண்ணின் வழக்கறிஞர், சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாஙான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாக ருஸ்டி முகமட் ஈசா தெரிவித்தார்.
பமேலா லிங் என்ற 42 வயதுடைய அந்தப் பெண் காணாமல் போனது தொடர்பில் குற்றவியல் சட்டம் 365 பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு வர்த்தகரான தோமஸ் ஹா திங் சியூ என்பவரின் மனைவிதான் பமேலா என்று அடையாளம் கூறப்பட்டது. அந்த வர்த்தகர், சபா, கூடாட்டில் நில கொள்முதல் சர்ச்சையில் தொடர்புப்படுத்தப்பட்டு பேசப்பட்டவர் ஆவார்.