கோழி முட்டை விலை 10 காசு உயரக்கூடும்

பெட்டாலிங் ஜெயா, மே.03-

கோழி முட்டைகளுக்கான அரசாங்கத்தின் மானியம் மற்றும் விலைக் கட்டுப்பாடு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து முட்டை விலை சராசரி 10 காசு விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோழி முட்டை விலை 10 காசு விலை உயர்வுக் காணக்கூடிய சாத்தியம் உள்ளது என்ற போதிலும் இது முட்டை விநியோகத்தைச் சீரான நிலைக்குக் கொண்டு வந்து, அத்தொழில்துறையை வலுப்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக பிரபல பேரங்காடியான மைடினின் நிர்வாக இயக்குநர் அமீர் அலி மைடின் தெரிவித்துள்ளார்.

இந்த சிறிய விலை உயர்வு, முட்டைத் தொழில்துறையில் ஆரோக்கியமான போட்டாப் போட்டியை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கோழி முட்டைகளுக்கு விலை கட்டுப்பாடு இல்லாததால் முட்டைகளில் விலை 10 காசு உயர வாய்ப்பு உள்ளது. ஆனால், முட்டை விநியோகப் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் எழாமல், அந்த தொழில்துறையை நிலைப் பெறச் செய்யும் அமீர் அலி மைடின் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS