பிகேஆர் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தேதி ஒத்தி வைக்கப்பட்டதற்கு ரஃபிஸி ரம்லி விடுமுறையில் இருப்பது முக்கியக் காரணமா

கோலாலம்பூர், மே.03-

இன்று மே 3 ஆம் தேதி நடைபெறவிருந்த பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலின் வேட்புமனுத் தாக்கல் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டதற்கு , கட்சியின் துணைத் தலைவர் ரஃபி ரம்லி விடுமுறையில் இருப்பது முக்கியக் காரணமாகும் என்று கூறப்படுவதை தேர்தல் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தபா மறுத்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கல் தேதி ஒத்தி வைக்கப்பட்டதற்கும், ரஃபிஸி ரம்லி விடுமுறையில் இருப்பதற்கும் அறவே தொடர்பில்லை என்று பிரதமர் துறை அமைச்சரான டாக்டர் ஸாலிஹா தெளிவுபடுத்தினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைப் போல் ரஃபிஸி ரம்லி, விடுமுறையில் இருப்பது வழக்கமான ஒன்றாகும் என்பதை டாக்டர் ஸாலிஹா விளக்கினார்.

பிகேஆர் கட்சியின் தொகுதித் தேர்தல்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது கட்சியின் உயர் மட்டப் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கட்சியின் துணைத் தலைவரும், பொருளாதார அமைச்சருமான ரஃபிஸி ரம்லி திடீரென்று விடுமுறையில் சென்று இருப்பது கட்சி வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.

WATCH OUR LATEST NEWS