ஓய்வெடுத்துக் கொண்டிருந்த லோரி ஓட்டுநரிடம் கொள்ளை

கோல சிலாங்கூர், மே.03-

நீண்ட தூரம் பயணத்திற்குப் பின்னர் டிரெய்லர் லோரியை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, அந்த கனரக வாகனத்திற்குள் உறங்கிக் கொண்ட இருந்த அதன் ஓட்டுநரிடம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த ஓட்டுநர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் கோல சிலாங்கூர், செகின்சான், பாரிட் 4 இல் நிகழ்ந்தது.

முகமூடி அணிந்திருந்த இரு கொள்ளையர்கள், அந்த ஹீனோ ரக லோரியின் கண்ணாடியை உடைத்து, உறங்கிக் கொண்டு இருந்த ஓட்டுநரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரின் உடமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஸாஹாருடின் தஜூடின் தெரிவித்தார்.

இதில் 54 வயது ஓட்டுநர் லோரியின் உடைந்த கண்ணாடி துகள்கள் பட்டு, கடும் காயத்திற்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS