ஜார்ஜ்டவுன், மே.03-
பொன்ஸி முதலீட்டுத் திட்ட மோசடி மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பாக டான்ஸ்ரீ அந்தஸ்தில் உள்ள பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
53 வயதுடைய அந்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.20 மணியளவில் அவரின் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட டான்ஸ்ரீ, கைது செய்யப்பட்டு இருப்பதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ முகமட் ஹஸ்புல்லா அலி உறுதிப்படுத்தியுள்ளார்.