சிங்கப்பூர், மே.03-
சிங்கப்பூரின் 14 ஆவது பொதுத் தேர்தல் வாக்களிப்பு, இன்று சனிக்கிழமை காலையில் தொடங்கி, சுமூகமாக நடைபெற்று வருகிறது.
கிட்டத்தட்ட 26 லட்சம் சிங்கப்பூரியர்கள் தங்களின் தொகுதியைப் பிரதிநிதிக்க விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினரையும் தங்களை வழிநடத்த இருக்கும் அரசாங்கத்தையும் தேர்வு செய்து வருகின்றனர்.
கடந்த 66 ஆண்டுகளாக ஆளும் மக்கள் செயல் கட்சியான பிஏபி, நான்காம் தலைமுறைத் தலைவராக, பிரதமர் லாரன்ஸ் வோங், அக்கட்சியை இத்தேர்தலில் முதன்முறையாக வழிநடத்திச் செல்கிறார்.
சிங்கப்பூரின் 14வது பொதுத் தேர்தலில் 11 கட்சிகளின் சார்பாக 204 வேட்பாளர்களும் இரு சுயேச்சை வேட்பாளர்களுமாகச் சேர்த்து 206 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 33 தொகுதிகளில் 97 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன.