கோத்தா திங்கி, மே.03-
ஜோகூர்பாரு – மெர்சிங் – கோத்தா திங்கி சாலையின் 44.2 ஆவது கிலோ மீட்டரில் நேற்றிரவு நிகழ்ந்த விபத்தில் பத்து வயது சிறுவன் உயிரிழந்தான். இதர 10 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்டு இருந்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசோப் ஒத்மான் தெரிவித்தார்.
புரோட்டோன் சகா காரில் பயணித்த அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.