புக்கிட் மெர்தாஜாம், மே.03-
ஆடவர் ஒருவர் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், புக்கிட் மீன்யாக் தொழிற்பேட்டைப் பகுதியில் தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் ஆடவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு மியன்மார் பிரஜையான 30 வயது மதிக்கத்தக்க நபர், உலோகப் பொருட்கள் மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலையின் தங்கும் விடுதியில் முதல் மாடியில் இறந்து கிடந்தார். பின்னர் நிர்வாகத்தின் மூலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்தத் தங்கும் விடுதியில் மற்றத் தொழிலாளர்கள் யாரும் காணப்படவில்லை. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மோப்ப நாயின் உதவியுடன் போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.