ஜோகூர் பாரு, மே.03-
ஸ்பா மருத்துவக் குளியல் என்ற பெயரில் அந்நிய நாட்டுப் பெண்களை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல் ஒன்றை குடிநுழைவுத் துறையினர் முறியடித்துள்ளனர்.
ஜோகூர் பாரு மாநகரில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் கடந்த வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்ட போது, அங்கு விபச்சாரம் நடைபெறுவது கண்டு பிடிக்கப்பட்டது. அந்நிய நாட்டுப் பெண்களைக் கைது செய்து விசாரணை நடத்திய போது அவர்களில் பத்து பேர், சம்பந்தப்பட்ட கும்பலினால் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
58 அதிகாரிகள் களம் இறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்ட போது, 18 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய 37 வியட்நாம் பெண்கள், 16 இந்தோனேசியப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பிடிபட்ட பெண்களில் 6 வியட்நாம் பெண்களும், 4 இந்தோனேசியப் பெண்களும் சம்பந்தப்பட்ட கும்பலினால் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்துள்ளது என்று குடிநுழைவுத் தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.