புத்ராஜெயா, மே.03-
கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட 130 கோடி வெள்ளி பெறுமானமுள்ள நெடுஞ்சாலைத் திட்டத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து 36 கோடி ரிங்கிட் கோரியது தொடர்பில் எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வரும் விசாரணையில் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிறுவனம் ஒன்றின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரியான 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர், நேற்றிரவு 11 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதாக அதன் வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்து 36 கோடி ரிங்கிட் கோரிய மிகப் பெரிய ஊழலில் இந்நபர், உடந்தையாக இருந்தததாக நம்பப்படுகிறது.