ஜெம்போல், மே.03-
எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு ஒத்துழைப்பு கொள்வது குறித்து பெர்சத்து கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.
அதே வேளையில் அப்படியொரு கூட்டு ஒத்துழைப்பு கொள்வதற்கான அவசியம் ஏற்படுமானால், அது குறித்து கட்சியின் அரசியல் பிரிவு மற்றும் உச்சமன்றத்தில்தான் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன் குறிப்பிட்டார்.
இப்போதைக்கு எந்தவொரு தரப்பினருடன் அரசியல் கூட்டு ஒத்துழைப்பு குறித்து முடிவு செய்யப்படவில்லை என்று முகைதீன் விளக்கினார்.