கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொள்ள சுகாதார அமைச்சு தயார்

கோல சிலாங்கூர், மே.03-

தனியார் கிளினிக்குகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகளின் விலைப் பட்டியல், பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்ற புதியச் சட்டம் கடந்த மே முதல் தேதி அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த புதிய நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தனியார் மருத்துவர்கள் வழங்கக்கூடிய கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொள்ள சுகாதாரத்துறை தயாராக இருப்பதாக அதன் அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ள மருத்துவர்களின் உரிமைகளைத் தாம் மதிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் வரும் செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள தனியார் மருத்துவர்களின் கோரிக்கை மனு எதுவாக இருந்தாலும் அதனைத் தாம் பெற்றுக் கொள்ளவிருப்பதாக டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS