சிங்கப்பூர், மே.03-
இன்று சிங்கப்பூர் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த வேளையில் துவாஸ் சோதனை சாவடி மையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்குச் செல்லும் பயணிகள் ஐந்து மணி நேர போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இன்று காலையில் சிங்கப்பூர் உட்லேண்ட்ஸ் மற்றும் துவாஸ் ஆகிய சோதனைச் சாவடி மையங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் தொடங்கியது.
இரவில் சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்குச் செல்ல வேண்டியவர்கள் ஐந்து மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேர தாமதத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்று சிங்கப்பூரின் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையமான ஐசிஏ அறிவித்துள்ளது.