கோலாலம்பூர், மே.04-
இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆசியான் உச்சநிலை மாநாட்டையொட்டி அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையையும் பள்ளி மாணவர்களுக்கு பிடிபிஆர் PdPR எனப்படும் வீட்டில் இருந்தே கற்றல் கற்பித்தல் முறையையும் செயல்படுத்துவது குறித்து அமைச்சரவை இன்னும் ஆராய்ந்து வருகிறது. இந்த விவகாரம் இரண்டு வாரங்களுக்கு முன்பு விவாதிக்கப்பட்டாலும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளரான அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.
ஆசியான் உச்சநிலை மாநாடும் இதர பெரிய கூட்டங்கள் நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி வெளியுறவு அமைச்சின் ஆசியான் செயலகம் ஆய்வு செய்து வருகிறது. கல்வி போன்ற சில துறைகளுக்கு கல்வி அமைச்சையும், அரசு ஊழியர்களுக்கு பொதுச் சேவை இயக்குநரையும் அணுகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.