பேச்சு வார்த்தைகள் விரைவில் இறுதிச் செய்யப்படும்

கோலாலம்பூர், மே.04-

சரவாக் மாநிலச் சட்டத் திட்டத்திற்குப் புறம்பாக, முறையான உரிமம் இல்லாமல் பெட்ரோனாஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பெட்ரோனாஸ் சாரிகாலி சென்டிரியான் பெர்ஹாட் அம்மாநிலத்தில் எரிவாயுவைக் கையாண்டது. அதன் தொடர்பாக, பெட்ரோனாஸ் நிறுவனத்திற்கும் பெட்ரோஸ் எனப்படும் பெட்ரோலியம் சரவாக் பெர்ஹாட்டுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைகள் விரைவில் இறுதிச் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார். இந்த விவகாரம் சுமூகமாகத் தீர்க்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பரஸ்பர நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதையோ அல்லது அறிக்கை வெளியிடுவதையோ தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சரவாக் முதலமைச்சர் டான் ஶ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபேங் இலண்டன் பயணத்திலிருந்து திரும்பியவுடன், இந்த விவகாரத்தை இறுதிச் செய்வதற்கான அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS