தேசிய நல்லிணக்கச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர், மே.04-

இனவெறி, வெறுப்புப் பேச்சு, சர்ச்சையைத் தூண்டுதல், பாகுபாடு ஆகியவற்றிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கவும், ஒருவர் மீது மற்றொருவர் மரியாதையை வளர்க்கவும் அக்தா கேஹார்மோனியான் நேஷனல் எனப்படும் தேசிய நல்லிணக்கச் சட்டத்தை அறிமுகப்படுத்த மலேசிய மனித உரிமைகள் ஆணையமான சுஹாகாம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கல்வி மட்டும் இன்றி, இதரக் கொள்கைகளிலும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதன் மூலமும், சமூகங்களுக்கிடையில் இரக்கத் தன்மையையும் புரிதலையும் வளர்ப்பதன் மூலமும் அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக் கொண்டது.

சமூகக் கலாச்சாரம் அல்லது தனிநபர் அடிப்படையிலான எந்தவோர் இனவெறியும் நவீன மலேசியாவில் இருக்கக்கூடாது என்று சுஹாகாம் உறுதியாக நம்புகிறது. மலேசியா பல்லினத்தன்மையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாடு என்றும், பல மத சமூகத்தின் பாரம்பரியம் கொண்டிருப்பதால், அஃது ஒரு பலவீனம் அல்ல, மாறாக புரிதல், ஒருவருவருக்கொருவர் மீது கொண்டுள்ள மரியாதை, சமத்துவக் கொள்கைகளுக்குப் பகிரப்பட்ட அர்ப்பணிப்பு மூலம் வளர்க்கப்பட வேண்டிய ஒரு வலிமை என்றும் ஆணையம் கூறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS