பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் எக்ஸ் கணக்கு முடக்கம்

புதுடெல்லி, மே.04-

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ ஜர்தாரி ஆகியோரின் எக்ஸ் சமூக வலைதள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. பஹல்காமில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தரின் யூடியூப் சேனல் உட்பட பாகிஸ்தானைச் சேர்ந்த, 16 முக்கிய ‘யூடியூப்’ சேனல்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் அரசின் எக்ஸ் தளப்பக்கம், அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் அந்நாட்டு முக்கிய பிரபலங்கள் சமூகவலைதள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ ஜர்தாரி ஆகியோரின் எக்ஸ் சமூக வலைதள கணக்குகள் இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு எதிராகவும், ராணுவத்துக்கு எதிராகவும் வெறுப்பைத் தூண்டும் வகையில் பொய்த் தகவல்களைப் பரப்புவதைத் தடுக்க சமூக வலைதள கணக்குகள் முடக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS