வெறும் இனிமையான வாக்குறுதியாக இருக்கலாம்

கோலாலம்பூர், மே.04-

மருத்துவர்களின் ஆலோசனைச் சேவைக் கட்டணத்தை ஒரு மாதத்திற்குள் இறுதிச் செய்வதாக சுகாதார அமைச்சு அளித்த உறுதிமொழி, தனியார் மருத்துவர்களின் வேலை நிறுத்தப் பிரச்சினையைத் தணிக்க வெறும் இனிமையான வாக்குறுதியாக இருக்கலாம் என்று ஹர்தால் டாக்டர் கொன்டிராக் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு மார்ச் மாதத்தில் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் இதே போன்ற வாக்குறுதியை அளித்திருந்தார். ஆனால் மே 1ஆம் தேதியைக் கடந்தும் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

மலேசிய மருத்துவ சங்கமான எம்எம்ஏவின் மருத்துவர்கள் வேலை நிறுத்தத் திட்டமிடலின் காரணமாகவே இந்த வாக்குறுதி தற்போது அளிக்கப்படுகிறதோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். தனியார் கிளினிக்குகளை நிர்வகிக்கும் செலவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், ஆலோசனைக் கட்டணத்தை உயர்த்துவது அவசரமாகத் தேவைப்படுகிறது என்று ஹர்தால் டாக்டர் கொன்டிராக் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS