நகைகளைத் திருடிய காதலர்கள் கைது

ஷா ஆலாம், மே.04-

ஷா ஆலம் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் நகைகளைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் காதலர்கள் இருவர், கடந்த வெள்ளிக்கிழமை புஞ்சாக் ஆலாமில் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார். கடை ஊழியரின் புகாரின் அடிப்படையில், பிற்பகல் 3:20 மணியளவில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தின் போது அணிந்திருந்த ஆடைகள், கைப்பேசிகள், திருடப்பட்ட நகைகள் ஆகியவையும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. 23 முதல் 25 வயது வரையிலான வேலையில்லாத இந்த காதலர்களுக்கு முந்தையக் குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும், அவர்கள் ஒன்றாகப் புதிய வாழ்க்கையைத் தொடங்கவும் குற்றச் செயல்களில் ஈடுபடவும் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருடப்பட்ட நகைகளில் சில அடகு வைக்கப்பட்டும், சில விற்கப்பட்டும் இருந்த நிலையில், அனைத்து நகைகளும் கிள்ளான் பகுதியில் இருந்து மீட்கப்பட்டன.

WATCH OUR LATEST NEWS