பெட்டாலிங் ஜெயா, மே.04-
பூச்சோங் ஜெயா, புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் இருந்த கார், மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் பட்டறை ஒன்று இன்று தீ விபத்தில் நாசமடைந்தது. காலை 10.56 மணிக்கு தமது தரப்புக்குத் தகவல் கிடைத்ததும் பூச்சோங் தீயணைப்பு – மீட்பு நிலையத்திலிருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் படையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
இந்தத் தீ விபத்தில் அப்பட்டறை 70 விழுக்காடு எரிந்து விட்டதாகவும் அங்கு இருந்த வாகனங்களும் முற்றாக சேதமடைந்த தாகவும் அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார். தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றாக அணைத்து விட்டதாகவும் இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.