குவாந்தான், மே.04-
2025 ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைச் சட்டத் திருத்தத்தை அரசாங்க அரசிதழில் வெளியிடுவதற்கு முன்பு, பேரரசர் சுல்தான் இப்ராஹிமிடம் வீட்டு வசதி, ஊராட்சி மன்ற அமைச்சு சமர்ப்பித்துள்ளது. கடந்த மார்ச் 5ஆம் தேதி மக்களவையிலும், மார்ச் 23ஆம் தேதி மேலவையிலும் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத் திருத்தம், தீயணைப்பு – மீட்புத் துறையின் மேலாண்மையையும் கட்டுப்பாட்டையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
இந்த மேலாண்மையில் தன்னார்வ தீயணைப்புப் படைகள், தீயணைப்புப் படை மாணவர் அணிகள், தனியார் தீயணைப்புப் படைகள், தீ பாதுகாப்பு ஆலோசகர்கள், ஆலோசனை நிறுவனங்கள், தகுதி வாய்ந்தவர்கள், தீ பாதுகாப்புக் குத்தகையாளர்கள், பதிவு செய்யப்பட்டப் பயிற்சி வழங்குநர்கள், பயிற்றுநர்கள், தீயை எதிர்த்துப் போராடும் கருவிகள் ஆகியவை அடங்கும் என்றார் அவர்.