புத்ராஜெயா, மே.04+
மே 1 முதல் நடப்புக்கு வந்த மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டையும் அதிக இலாபம் ஈட்டுவதைத் தடுக்கும் ஆணையின் இணக்க நிலை மன நிறைவளிக்கும் வகையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார். மருந்துகளின் விலையைக் காட்சிப்படுத்தத் தவறினால், முதல் மூன்று மாதங்களுக்கு தனியார் மருந்தகங்களுக்கும் கிளினிக்குகளுக்கும் அபராதம் விதிக்கப்படாது என்றார் அவர்.
அனைத்து தரப்பினருக்கும் மருந்துகளைக் காட்சிப்படுத்துவது தொடர்பான விவகாரங்களும் அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து தெளிவாகவும் நன்கு அறிந்திருக்கவும் மூன்று மாதங்கள் தேவை என்றார். அனைத்து தனியார் சுகாதார நிலையங்களும் இந்த ஆணையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் சுகாதார அமைச்சுடன் இணைந்து செயல்பட வேண்டும் என டாக்டர் சுல்கிப்ளி நம்பிக்கை தெரிவித்தார்.