சி தர முட்டைகளின் விநியோகம் அதிகரிக்கப்படும்

கோலாலம்பூர், மே.04-

சந்தையில் அதிகத் தேவையை பூர்த்தி செய்ய சி தர முட்டைகளின் விநியோகத்தை அதிகரிக்க விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்கும். இவ்வாண்டு இரமலான் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தட்டு 5 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்ட இந்த சிறப்பு முட்டைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு தெரிவித்தார். எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் கோழி முட்டைகளுக்கான மானியத்தை அரசாங்கம் முழுமையாக நிறுத்தும் போது இந்த முட்டை விநியோகம் விலையை நிலைப்படுத்த உதவும் என்றார்.

நாடு முழுவதும் நடைபெறும் அக்ரோ மடானி, ஜுவாலான் ரஹ்மா விற்பனைகள் மூலம் பயனீட்டாளர் போட்டி விலையில் முட்டைகளை வாங்க முடியும். ஏற்கனவே ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைத் தவிர, கோழி முட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சு தொடர்ந்து தடை விதிக்கும் எனவும் முகமட் சாபு குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS