மருந்து விலை காட்சிப்படுத்துதலுக்கு எதிரான போராட்டம் அல்ல

கோலாலம்பூர், மே.04-

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பேரணியானது, கடந்த மே 1 முதல் நடப்புக்கு வந்த மருந்து விலை காட்சிப்படுத்துதலுக்கு எதிரான போராட்டம் அல்ல என்று மலேசிய மருத்துவ சங்கம் எம்எம்ஏ MMA வலியுறுத்தியுள்ளது. மாறாக, மருத்துவர் தொழிலுக்கு விலை கட்டுப்பாடும் அதிக இலாபம் ஈட்டுவதைத் தடுக்கும் சட்டமான சட்டம் 723 பயன்படுத்தப்படுவதை எதிர்ப்பதற்காகவே இந்த பேரணி நடத்தப்படுகிறது என்று எம்எம்ஏவின் தனியார் மருத்துவப் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் பர்ம்ஜிட் சிங் குல்டிப் சிங் தெரிவித்தார்.

இந்தப் பேரணி சுகாதார அமைச்சிலிருந்து பிரதமர் அலுவலகம் நோக்கிச் செல்லும் என்றும், இதற்கான அனைத்து ஆவணங்களும் அதிகாரிகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மருத்துவர்கள் மருந்து விலை காட்சிப்படுத்துதல் விதிமுறைகளை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் மருத்துவத் தொழிலுக்கு சட்டம் 723 பயன்படுத்தப்படுவதைக் கடுமையாக எதிர்ப்பதாகவும் எம்எம்ஏ தெளிவுபடுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS