சிரம்பான், மே.05-
மசீச.வை கலைத்து விட்டு, அதன் உறுப்பினர்கள் ஜசெகவில் இணைவது என்பது நடக்கும் சாத்தியம் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ள ஜசெக.வின் கம்பார் எம்.பி. சோங் ஸேமின் கருத்து, அவரின் சொந்த கருத்தே தவிர அது ஜசெகவின் நிலைப்பாடு அல்ல என்று அந்தோணி லோக் விளக்கினார்.
இதற்கு முன்பு நடைபெற்ற ஜசெக உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விவகாரம் அறவே விவாதிக்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.