மிஸியின் கட்டட வயரிங் பயிற்சி

சுங்கை பட்டாணி, மே.05-

இந்தியர் திறன் பயிற்சி முன்னெடுப்பான மிஸியின் முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட மின்சார வயரிங் தொழில்முனைவோர் பயிற்சித் திட்டம், சுங்கைப் பட்டாணியில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு தொழில்நுட்ப ஆற்றல் மற்றும் தொழில் முனைவோர் திறன்களை வழங்கும் வகையில் ஐந்து நாள் நுட்பப் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்தத் திட்டம் மின்சார வயரிங் இணைப்புத் துறையில் அதிக இளம் இந்திய தொழில்முனைவோரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் மூலம் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதும், இந்திய சமூகத்தினரிடையே மிகவும் திறமையான பணியாளர்களை மேம்படுத்துவதும் நோக்கமாக அமைந்தது.

இதன் நிறைவு விழாவில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் சிறப்புப் பணிக்கான அதிகாரி டிக்காம் லூர்த் கலந்து கொண்டு, பங்கேற்பாளர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கினார்.

இந்தப் பயிற்சியானது, இந்திய சமுதாயத்தின் இளையோர்களுக்கு அடிப்படை திறன், மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட மிஸியின் பிரதான திட்டமாகும் என்று டிக்காம் லூர்த் தமது உரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மனித வள அமைச்சின் சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் பல பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, நிறுவனத்தின் கீழ் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

WATCH OUR LATEST NEWS