சர்ச்சைக்கு இடமான தேர்தல் முடிவுகள் ஏற்க முடிவு

கோலாலம்பூர், மே.05-

கடந்த மாதம் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தொகுதித் தேர்தலில் சர்சைக்குரிய தேர்தல் முடிவுகள், ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேர்தல் முடிவுகள் தொடர்பில் அனைத்துலக ஆடிட் (audit ) நிறுவனம் விளக்கம் அளித்தது.

அந்த விளக்கமளிப்புக்குப் பிறகு எந்தவோர் ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாமல் பிகேஆர் கட்சியின் தேர்தல் முடிவுகள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

WATCH OUR LATEST NEWS