காணாமல் போன மாது குறித்து எஸ்பிஆர்எம் புகார் அளித்துள்ளதா?

புத்ராஜெயா, மே.05-

புத்ராஜெயா, எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு விசாரணையில் ஆஜராகுவதற்காகச் செல்வதாகச் கூறி சென்ற மாது ஒருவர், இன்று வரையில் வீடு திரும்பாதது குறித்து அந்த ஆணையம், புகார் அளித்துள்ளதா? என்று வழக்கறிஞர் சங்கீட் கவுர் டியோ வினவியுள்ளார்.

42 வயது பமேலா லிங் காணாமல் போனது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்மணி காணாமல் போனது குறித்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்

அதே வேளையில் தங்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பமேலா லிங், காணாமல் போனது குறித்து எஸ்பிஆர்எம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதா? என்று அந்த கிரிமினல் வழக்கறிஞர் வினவியுள்ளார்.

தனது கணவர் சம்பந்தப்பட்ட எஸ்பிஆர்எம் விசாரணையில் ஆஜராகுவதற்குக் கடந்த மாதம் அந்த ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றபோது, பமேலா லிங் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண்மணி முக்கிய விவரங்களை வெளியிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நிகழ்ந்து இருக்கலாம் என்று குடும்பத்தினர் அஞ்சுவதாக வழக்கறிஞர் சங்கீட் கவுன் டியோ தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS