லஞ்சம், இரண்டு போலீஸ்காரர்கள் கைது

புத்ராஜெயா, மே.05-

5 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இரண்டு போலீஸ்காரர்களையும் விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு போலீஸ்கார்களும் இன்று காலையில் கோல திரங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுத்து வைப்பதற்கான அனுமதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

WATCH OUR LATEST NEWS