மெர்சிங், மே.05-
பேருந்து உட்பட நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் அறுவர் காயமுற்றனர். இச்சம்பவம் இன்று காலை 5.38 மணியளவில் ஜோகூர், மெர்சிங், ரிஸ்டா சுங்கை அம்பாட், ஜாலான் ஜெமாலுவாங்கில் நிகழ்ந்தது.
சம்பவ இடத்தில் இருந்து 31 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தின் வீர்கள், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, வாகனத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த பாதிக்கப்பட்டவர்களைச் சிறப்பு சாதனங்களின் உதவியுடன் மீட்டனர்.
இதில் எம்பிவி வாகனத்தில் பயணித்த மூன்று ஆண்கள் ஒரு பெண் மற்றும் இரண்டு லோரிகளின் ஓட்டுநர்கள் காயமுற்றதாக மெர்சிங் தீயணைப்பு நிலைய செயலாக்க அதிகாரி முகமட் ஷம்சூரி ஷபாஃரி தெரிவித்தார்.