நிலச்சரிவுக்கு விரைந்து தீர்வு காண்பீர்

இஸ்கண்டார் புத்ரி, மே.05-

ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி- தாமான் முத்தியாரா ரினி, தாமான் பெருமாஹான் ரினி ஹோம்ஸ் வீடமைப்புப் பகுதியில் அடிக்கடி நிகழும் நிலச்சரிவு சம்பவங்களுக்கு விரைந்து தீர்வு காணுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உயிர்ப்பலி ஏற்படும் அளவிற்கு நிலச்சரிவுக்கு வித்திடக்கூடிய பேராபத்து நிகழும் வரை காத்திருக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட வீடமைப்புப் பகுதியின் செயற்குழு உறுப்பினர் 41 வயது G. வேதவல்லி கேட்டுக் கொண்டார்.

அடை மழையின் போது, இதுவரை இரண்டு முறை பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடமைப்பு பராமரிப்பு நிறுவனமான ரன்ஹீல் எஸ்ஏஜே நிறுவனம் மற்றும் போலீஸ் துறையில் புகார் அளித்தும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதவல்லி தெரிவித்துள்ளார்.

உயிர்ப்பலி சம்பவம் நிகழ்ந்தால்தான் நடவடிக்கை எடுப்பார்களா? என்று வேதவல்லி கேள்வி எழுப்பியுள்ளார். சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கும் சம்பந்தப்பட்ட வீடமைப்புப் பகுதியில் இரவு நேரம் அல்லது மழை காலங்களில் மிகுந்த அச்சத்துடன் தாங்கள் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS