துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியா? முடிவு செய்யவில்லை

கோலாலம்பூர், மே.05-

பிகேஆர் கட்சியின் உயர் மட்டப் பதவிகளுக்கான தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து தாம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கல் நடைபெறுவதற்கு இன்னும் 4 நாட்கள் உள்ளன. கட்சியின் எந்தப் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து தாம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கடந்த தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்விக் கண்டவரான சைஃபுடின் குறிப்பிட்டார்.

எனினும் தாம் போட்டியிடவிருக்கும் பதவி குறித்து இன்னும் சில தினங்களில் அறிவிக்கவிருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பொதுச் செயலாளரான சைஃபுடின் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS