கோலாலம்பூர், மே.05-
மலேசியா மீது அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதிக்கான வரி தொடர்பில் விவாதிப்பதற்கு நாடாளுமன்ற சிறப்பு மக்களவை இன்று திங்கட்கிழமை கூடியது.
விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக, மறைந்த முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.
அப்துல்லா அகமட் படாவி, ஒரு தேசியவாதி என்று மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் புகழாரம் சூட்டினார்.
நாட்டை மேம்படுத்துவதில் அவரின் தனித்துவப் பங்களிப்பும், மக்களை நேசித்த உன்னதப் போக்கும் நாட்டுடன் இரண்டறக் கலந்தது என்று ஜொஹாரி அப்துல் வர்ணித்தார்.